--- --:--:-- --

விறுவிறுப்பாக நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி..!

2

புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். அவருடன் அவரது மகன் இன்பநிதியும் பங்கேற்றார்.

 

முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கும் முன் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி வாசிக்க, வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகள், 750 காளையர்கள் களம் காண உள்ளனர். களம் காணும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தை பெறும் காளைக்கு டிராக்டர் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon