மகர விளக்கு பூஜை – கூட்ட நெரிசலை தவிர்க்க கட்டுப்பாடுகள்

பரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை நடைபெறும் நிலையில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் ஆன்லைனில் 50,000, ஸ்பாட் புக்கிங்கில் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

 

ஜன.15 ஆம் தேதி ஆன்லைன் புக்கிங்கில் 60,000 பக்தர்களுக்கு அனுமதி; ஜன.16 ஆம் தேதி முதல் வழக்கமான முறையில் புக்கிங் நடைபெறும் எனவும் ஜன.20 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.