--- --:--:-- --

அடுத்த 3 நாட்கள் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

1

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

 

மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பொங்கல் பண்டிகை நாளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon