தவறான சிகிச்சை..பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பட்டணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை சேர்ந்த மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த செல்வி என்பவருக்கு கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண் உயிரிழப்புக்கு மருத்துவர்களே காரணம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





