வீலிங் செய்த 8 இளைஞர்களை பிடித்த போலீஸ்..!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து ஓட்டிய இளைஞர்கள் எட்டு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இளைஞர்கள் சாலையில் அட்டகாசம் செய்த வீடியோ வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து இரண்டு வாகனத்திற்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த காவல்துறையினர் இளைஞர்களை எச்சரித்து அனுப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





