--- --:--:-- --

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை பலி..!

7

மதுரவாயில் அருகே குப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. சென்னை மதுரவாயில் அடுத்த மாநகரம் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டி அருகே குழந்தை ஒன்று கிடப்பதாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை கைப்பற்ற பார்த்த பொழுது இறந்த நிலையில் இருப்பது பெண் குழந்தை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் பெண் குழந்தையை இறந்த நிலையில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon