--- --:--:-- --

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா..குமரியில் இன்று முதலமைச்சர்..!

8

ன்னியாகுமரியில் இன்று நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருக்குறள் கண்காட்சியை துவக்கி வைத்து விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.

 

கன்னியாகுமரியில் கடலுக்குள் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே போக்குவரத்து நடைபெறுகிறது. கடலில் வேறுபடும் நீர்மட்ட ஏற்ற இரக்கம் மற்றும் சீற்றம் காரணமாக அவ்வப்பொழுது படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

 

இதனால் திருவள்ளுவர் சிலைக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்க சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வழிபடுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 37 கோடி ரூபாய் மதிப்பில் 72 மீட்டர் நீளம் 10 மீட்டர் அகலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்ணாடி கூத்து பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து திருவள்ளுவர் சிலை விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணாடி பாலத்தை நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருக்குறள் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon