காவல்துறையினரை குறை சொல்ல மாட்டேன் : பவன் கல்யாண்
ஹைதராபாத் திரையரங்கில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினருக்கு ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளார். புஷ்பா 2 திரையரங்கின் போது திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பவன் கல்யாண் திரையரங்க நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த வாரத்தில் அல்லு அர்ஜுன் மட்டுமே குற்றவாளியாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே வேலையில் இது போன்ற விவகாரங்களில் காவல்துறையறை குறை சொல்ல மாட்டேன் என்றும் பாதுகாப்பே அவர்களுக்கு முன்னுரிமை என்றும் கூறியுள்ளார். பவன் கல்யாண் அல்லு அர்ஜுனனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





