தமிழகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்..கருப்பு பட்டியலில் சேர்த்த கேரளா..!
தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகளை கொட்டிய ஒப்பந்த நிறுவனத்தை கேரள அரசு கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. நெல்லையில் ஆறு இடங்களில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், கேரள அரசுக்கும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை கேரள அரசு அகற்றியது.
இந்த நிலையில் தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகளை கொட்டிய ஒப்பந்த நிறுவனத்தை கேரளா அரசு கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. சட்ட விரோத செயல்களால் கேரள அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும் ஒப்பந்த நிறுவனமே ஏற்க வேண்டும் என கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





