சினிமாவை விட்டு விலக விருப்பம் – புஷ்பா இயக்குநர்
புஷ்பா-2 பட வெளியீட்டின் போது பெண் ஒருவர் இறந்தது தொடர்பாக, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
டிசம்பர் 4 ஆம் தேதி புஷ்பா-2 படம் வெளியான நிலையில், அப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில், படக்குழுவினருடன் படம் பார்த்தார். அப்போது ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்த நிலையில், பெண் உயிரிழந்த சம்பவத்தின்போது என்ன நடந்தது என விவரங்களை தருமாறு, காவல்துறை அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் ஹைதராபாத்தில் உள்ள சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் ஆஜரானார். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




