--- --:--:-- --

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத்தந்தை..பிரபல பின்னணி பாடகர் சர்ச்சை கருத்து..!

3

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேச தந்தை என பின்னணி பாடகர் அபிஜித் பட்டாச்சாரியா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல மொழிகளில் பின்னணி பாடகராக இருந்து வருபவர் அபிஜித் பட்டாச்சாரியா.

 

இவர் காந்தி, பாகிஸ்தானுக்கு தான் தேசத்தந்தை, இந்தியாவிற்கு அல்ல என்று தெரிவித்தார். பாகிஸ்தான் தான் ஒரு புதிதாக உருவாக்கப்பட்டது எனவும் தவறுதலாக காந்தி நமது தேசத்தின் தந்தை என அழைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

அபிஜித் பட்டாச்சாரியாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon