எனக்கும் லலித் மோடிக்கும் இந்தியாவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது : விஜய் மல்லையா
நாட்டுக்காக உழைத்த தமக்கும் லலித் மோடிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். நிதி மோசடி வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்ற இந்திய தொழிலதிபரான விஜய் மல்லையா நேற்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவருக்கு தன் எக்ஸ் பக்கம் மூலம் வாழ்த்தை அறிவித்த ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்தது. நாம் இருவரும் அதை அனுபவித்துள்ளோம். இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த விஜய் மல்லையா நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் முயற்சி செய்த நமக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





