மகளிர் கல்லூரிக்குள் புகுந்த காட்டெருமை..!
கொடைக்கானல் மகளிர் கல்லூரிக்குள் சரசரவென காட்டு எருமைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆட்டுவம்பட்டி பகுதியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கன்று குட்டிகளுடன் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்குள் சகசரவென புகுந்ததால் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
காவலர்கள் உள்ளே புகுந்த நேரத்தில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





