--- --:--:-- --

உதயநிதி ஸ்டாலினின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழா..!

12

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு திருமுருகன்பூண்டி நகர இளைஞரணி நிர்வாகி ஆ. பிரகாஷ் சார்பில் ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆபீஸ் டேபிள்கள், 5 பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் ஸ்டீல் ரேக்கு வழங்கும் விழா திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

விழாவிற்கு திருமுருகன்பூண்டி தி.மு.க நகர செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் நா.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் கலந்து கொண்டு டேபிள், சேர்களை வழங்கினார்.

 

5 டேபிள்களை மற்றும் சேர்களை அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், திருமுருகன்பூண்டி பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) லாவண்யா, ராக்கியாபாளையம் பள்ளி தலைமை ஆசிரியை  உமாமகேஸ்வரி,  ஊமையஞ் செட்டிபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி, தேவராயன்பாளையன் பள்ளி தலைமையாசிரியை நிர்மலா ஆகியோருக்கும், ஸ்டீல் ரேக்கை அனைப்புதூர் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தியும் பெற்றுக் கொண்டனர்.

 

முடிவில் பூண்டி நகர இளைஞரணி நிர்வாகி பிரகாஷ் நன்றி கூறினார். விழாவில் திருப்பூர் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, உசேன், எம்.எஸ்.மணி, வேலம்பாளையம் பகுதி செயலாளர் கோ.ராமதாஸ், கோட்டா பாலு, திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் பாரதி, ராஜன், பூண்டி தி.மு.க நிர்வாகிகள் லிங்கேஸ்வரன், ஜுனைத், ரமேஷ், கவின்குமார், ரகுவரன், சதீஷ், தாமோதரன், சச்சின், மதிவாணன், அய்யாசாமி, ராமசந்திரன் பூங்கோதை, மகளிரணி பரமேஸ்வரி, ஈஸ்வரி, உள்பட தி.மு.க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon