இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்..!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் கீழ காசாங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அப்பொழுது இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் விசைப்படகை சுற்றிவளைத்தனர். மேலும் படகிலிருந்த 18 மீனவர்களையும் கைது செய்து விசைப்படகை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று புதுச்சேரி மீனவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





