--- --:--:-- --

சென்னை அருகே ரூ.330 கோடியில் டைடல் பூங்கா..!

9

சென்னை அருகே பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

சென்னை தரமணி, கோவையை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் மதிப்பில் டைடல் பார்க் கட்டப்பட்டது. 6 ஆயிரம் சதுர அடி முதல் ஒரு லட்சம் சதுர அடி வரை அலுவலகங்களுக்கு ஏற்ற இட வசதியுடன் கூடிய டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், பொதுமக்களிடம் மனுக்களை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.

 

முன்னதாக, பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தில் நின்றப்படி, டைடல் பார்க்கை முதலமைச்சர் பார்வையிட்டார்.சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த டைடல் பார்க் மூலம், சுமார் 6,000 பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பெரிய அளவிலான வாகன நிறுத்துமிடம், தடையற்ற மின்வசதி, உணவுக்கூடம், உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இந்த டைடல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

 

இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்ட துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

18 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த மையத்தில், பொறியியல் பரிசோதனை கூடம், காப்புரிமை வசதி, மேம்பட்ட பயிற்சிக்கான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon