மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய ஆட்சியர்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டி பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்ட அவர் பசுவந்தனை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்.
மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்ட அவர் உணவின் தரம் குறித்தும், வழங்கப்படும் உணவு வகைகள் பற்றியும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் விடாமல் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்க அவருடன் அமர்ந்து சாப்பிட்ட மாணவர்களும் உடனுக்குடன் பதில் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





