முசிறி அருகே மதுபோதையில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகே சீட்டப்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் அவரது நண்பர் ரமேஷ் இருவரும் கரூர் அருகே உள்ள மோகனூரில் தங்கி பர்னிச்சர் வேலை செய்து வந்தனர்.
அவர்கள் இருவரையும் மது அருந்துவதற்காக அழைத்து சென்ற கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தொட்டியம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பாலகிருஷ்ணனை அடித்துக் கொன்ற கும்பலை சேர்ந்த தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா மேற்குவார்பட்டி சேர்ந்த சதீஷ்குமாரை அதே பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.