--- --:--:-- --

தகனம் செய்யப்பட்டது டெல்லி கணேஷ் உடல்..!

7

மூத்த நடிகர் டெல்லி கணேசனின் உடல் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின்மையானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 

வயது முதிர்வு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக நேற்று முன் தினம் நள்ளிரவு நடிகர் டெல்லி கணேஷ் உயிரிழந்தார். இதையடுத்து கிராமப்புறத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

 

தொடர்ந்து டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது இல்லத்திற்கு நேரில் சென்று விமானப்படை வீரர்கள், டெல்லி கணேஷ் உடலில் மீது தேசியக்கொடி போர்த்தியும் மலர் வளையும் வைத்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் நெசப்பாக்கம் மின்மையானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon