நகை காணாமல் போனதாக நடிகர் பார்த்திபன் அளித்த புகார்..!
நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட 12 சவரன் நகைகள் அவரது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் நடிகர் பார்த்திபனின் அலுவலகமும் மேல் தளத்தில் அவரது வீடும் ஒரே கட்டடத்தில் உள்ளது.
இந்நிலையில் அவரது அலுவலகம் திருவான்மியூர் பகுதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. பொருட்களை இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் அலுவலகத்தில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாக பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தமது உதவியாளர் மீதும் அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார். இதையடுத்து கிருஷ்ணராஜபுரம் காவல்துறையினர் விசாரித்த பொழுது அலுவலகம் மாற்றப்படுவதால் நகைகள் மேல்மாடியில் உள்ள பார்த்திபனின் வீட்டில் வைக்கப்பட்டதாக தகவல் அளித்தார்.
பார்த்திபனின் வீட்டிலிருந்து 12 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. பார்த்திபனின் உதவியாளர் நல்ல நோக்கத்துடன் வீட்டில் நகையை வைத்தாரா அல்லது தவறான நோக்கமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





