தமிழக வெற்றி கழகம் எடுத்த அதிரடி முடிவு..!
கட்சிக் கொள்கைகளை விளக்கும் வகையில் மாவட்டம் தோறும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழக வெற்றி கழகம் முடிவெடுத்துள்ளது. அண்மையில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெற்றது. பின்னர் அலுவலகத்தில் செயற்குழு கூட்டமும் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் மீண்டும் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள தலைமை சார்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிற கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் இருந்து தற்போது ஓரங்கட்டப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை த.வெ.க. வை இணைக்கும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





