விரல் விட்டு எண்ணிவிடும் தமிழ்நாட்டை பூர்வீகமாக முன்னணி நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர், தன்னிடம் சிறுவன் ஒருவன் பணப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடையாறு சிக்னலில் தனது வாகனத்தை நிறுத்தியபோது,
8 வயது சிறுவன் தன்னிடம் பணம் கேட்டதாகவும் பணம் கொடுக்க தாம் மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுவன் ஒரு புத்தகத்தை 50 ரூபாய்க்கு தன்னிடம் விற்க முயன்றதாகவும் அதற்கு தாம் 100 ரூபாய் கொடுத்தாகவும் நிவேதா கூறியுள்ளார்.
அப்போது அந்த சிறுவன் தன்னிடம் 500 ரூபாய் கேட்டதாகவும், அதனால் புத்தகத்தை திருப்பிக்கொடுத்து விட்டு பணத்தை திரும்ப வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அந்த சிறுவன் புத்தகத்தை காரில் வீசிவிட்டு தனது கையில் இருந்த 100 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? என்றும் நிவேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். நிவேதா பெத்துராஜின் இந்த குற்றச்சாட்டு குறித்து அடையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.