டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை..!
தமிழ்நாடு வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று ஏற்கனவே ஊழியர்களுக்கு அறிவுறுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தவறு கண்டறியப்படும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இருப்பினும், அண்மை காலமாக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்கப்பட்டால், அந்த உள்ள மேற்பார்வையாளர் உள்பட அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




