தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு 12,846 சிறப்பு பேருந்துகள்..!
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பணி, கல்வி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தமாக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன்மூலம் 5.76 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.
இவ்வாறு சென்றவர்கள் ஊர் திரும்ப இன்று முதல் நவ.4-ம் தேதி வரை 7,605 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி வெவ்வேறு ஊர்களில் இருந்து தினசரி சென்னைக்கு இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் இன்றைய தினம் கூடுதலாக 600 பேருந்துகள் என 2,692 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமையான நாளைய தினம் கூடுதலாக 1,735 பேருந்துகள் என 3,827 பேருந்துகளும் , நாளை மறுநாள் திங்கட்கிழமை கூடுதலாக 830 பேருந்துகள் என 2,922 பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




