--- --:--:-- --

தேவரம்மா கோயிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!

2

கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற மலை கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள தேவிரமா மலை கோயிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது.

 

3000 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அபாயகரமான மலை பாதையில் தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் தேவரமா பெட்டா கோயிலில் திருவிழாவை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று வந்தனர்.

 

மலை பாதையில் செல்லும் பொழுது வழுக்கியதில் பலரும் காயமடைந்தனர். இவர்களை மீட்டு காவல் துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon