மாமூல் தர மறுத்த கடைக்காரரை சோடா பாட்டிலால் தாக்கியதால் அதிர்ச்சி..!
புதுச்சேரியில் மாமூல் தர மறுத்ததால் கடை ஊழியரை சோடா பாட்டிலால் கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே உள்ள மதுபானம் அருகே வசந்த் என்பவர் கடை நடத்தி வருகிறார்.
இரவில் கஞ்சா மற்றும் மது போதையில் சென்ற மூன்று நபர்கள் சிகரெட் மற்றும் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். மாமுல் கொடுக்க மறுத்த கடை ஊழியர் சந்திரனை சோடா பாட்டில் மற்றும் இதர பொருட்களை வைத்து தலையில் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்பொழுது இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





