விமானிகள் குழுவினருக்கு ஆளுநர், முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து..!
திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தில் பத்திரமாக தரை இறக்கிய விமானங்களுக்கு ஆளுநர் முதலமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஆளுநர் ரவி இக்கட்டான நேரத்தில் துணிச்சலாகவும் பதற்றம் இன்றியும் விமானிகள் செயல்பட்டதாக கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்குவதில் பிரச்சனை என கேள்விப்பட்டதும் தொலைபேசி மூலம் அதிகாரிகளை ஒன்றிணைத்து தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.
தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்வதற்கு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து பயணிகளும் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விமானத்தை பத்திரமாக தரை இறக்கிய விமானங்களுக்கு தனது பாராட்டுக்கள் என்றும் கூறியுள்ளார். இதேபோல் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையான நேரத்தில் திறம்பட செயல்பட்ட விமானிகளுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





