4வது திருமணம் செய்து கொள்ளும் வனிதா விஜயகுமார்..!

டிகை வனிதா விஜயகுமார் திருமண அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தனது நீண்ட காலம் நண்பரான நடன இயக்குனர் ராபட்டை வருகிற 5ம் தேதி திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார்.

 

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டும் கவனம் ஈர்த்தார். இவர் 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில் ஆனந்து ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்தார். அவரிடமும் விவாகரத்து பெற்ற நிலையில் 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரோடு திருமணமானது. ஆனால் சில நாட்களிலேயே இருவரும் பிரிந்தவுடன் திடீரென மரணமடைந்தார்.