விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த மனு பாக்கர்..!
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தான் வென்ற 2 வெண்கலப் பதக்கங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது என மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
தன்னை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பதக்கங்களைக் காட்டச் சொன்னாலும், அதை பெருமையுடன் செய்வதாகக் கூறிய அவர், தனது அழகான பயணத்தை பகிர்ந்து கொள்ள இதுதான் வழி எனத் தெரிவித்துள்ளார்.
எங்கு சென்றாலும் பதக்கத்தை காட்டிக் கொண்டிருப்பதாக சிலர் விமர்சித்தது குறித்து அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




