--- --:--:-- --

உணவகத்தில் உணவு விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

5

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது.

 

இங்கு நாள்தோறும் ஆதார் பிழை திருத்தம் மற்றும் மருத்துவ காப்பீடு பல்வேறு குறைகளுக்காக வரும் நூற்றுக்கணக்கான பொது மக்களுக்கு இந்த உணவகத்தில் உணவு மற்றும் தேனீர், காபி வாங்கி அருந்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் மின்கட்டண உயர்வை காரணம் காட்டி உணவகத்தில் உணவகத்தின் உணவு விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் 20 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட கலவை சாதம் 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 

உயர்த்தப்பட்ட விலையை மீண்டும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon