--- --:--:-- --

லட்டு சர்ச்சை : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி..!

1

திருப்பதி லட்டு குறித்து பேசியதற்காக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார். ’மெய்யழகன்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.

 

இதில், நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கார்த்தி, இங்கு லட்டு குறித்து பேச வேண்டாம் என்றும் உணர்ச்சிமிக்க விஷயம் என்பதால் அதனை தவிர்த்துவிடலாம் என்றும் கூறினார்.

 

இந்நிலையில், நடிகர் கார்த்தியின் இந்த கருத்துக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சினிமா நிகழ்வில் லட்டுவை வைத்து நகைச்சுவை செய்யக் கூடாது என்றும், சனாதன தர்மம் குறித்து பேசும்போது நூறு முறை யோசித்து விட்டு பேச வேண்டும் என்றும் பவன் கல்யாண் கூறியிருந்தார்.

 

பவன் கல்யாண் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார்.இது தொடர்பாக கார்த்தி எக்ஸ் பக்கத்தில், “நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் வெங்கடேச பெருமாளின் பக்தன் என்ற முறையில் நமது பண்பாட்டின் மீது பிடிப்புடன் இருந்து வருவதாகவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

 

அவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும், ‘தவறு உங்களுடையது அல்ல, நிகழ்ச்சியின் தொகுப்பாளருடையது’ என்றும், ’ நீங்கள் அந்த கேள்வியை தவிர்த்த போதும் ஸ்கீரினில் லட்டு மீம் போட்டது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் தவறு உங்களுடையது அல்ல’ என்று ரசிகர்கள் பலரும் கார்த்தியின் தவறு இதில் எதுவும் இல்லை என்று அவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon