--- --:--:-- --

ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து கிடைத்த பணத்தில் சொகுசு பங்களா..!

2

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் whatsapp குழுக்களை உருவாக்கி ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்து வந்த சட்டவிரோத கும்பலை சேர்ந்த ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வந்தவாசி கொட்டி நாயனூர் தெருவை சேர்ந்த அருள் என்ற அருணாச்சலம் ஆன்லைன் மூலம் வந்தவாசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் லாட்டரி தொழில் செய்து வந்துள்ளார்.

 

இதன் மூலம் ஈட்டிய பணத்தில் சொகுசு வீடுகளை கட்டியுள்ளார். இது குறித்து தகவலின் பேரில் அருணை கையும், களவுமாக பிடித்த காவல்துறையினர் அவரிடம் பறிமுதல் செய்த ஸ்மார்ட் ஃபோன்களில் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கான whatsapp குழுக்கள் உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றினர்.

 

அவரது வீடுகளில் கணக்கில் வராத 48 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் 83 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அருணை கைது செய்த தனிப்படை போலீசார் செங்கல்பட்டு ஏஜென்ட் ஆக இருந்த சையத் இப்ராஹிமையும் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon