ரூ.26.61 கோடி டெண்டர் முறைகேடு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு
சென்னை மாநகராட்சியில் டென்டரில் ரூ.26.61 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சாலை பணிகள், மழை நீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட மாநகராட்சியில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் டெண்டர் முறைகேடில் உதவியாக இருந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் மீதும் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




