தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்!
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருந்தவர் வெள்ளையன். அவருக்கு திடீரென்று நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதுதொடர்பாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நுரையீரல் தொற்று நோய் காரணமாக, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆண்டிபயோடிக் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




