--- --:--:-- --

கெமிக்கலை கூல்டிரிங்ஸ் உடன் கலந்து சக மாணவர்களுக்கு குடித்த மாணவர்..!

9

புதுச்சேரி அருகே 2 மாணவர்கள் பள்ளி ஆய்வுக் கூட்டத்தில் பயன்படுத்தப்படுகிற கெமிக்கலை கூல்டிரிங்க்ஸில் கலந்து குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இயங்கி வருகிறது.

 

இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் காப்பர் சல்பேட் என்ற கெமிக்கலை கூல்டிரிங்க்ஸில் கலந்துள்ளார். அதனை இரண்டு மாணவர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் என்று கூறி கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

இதை குடித்த இரண்டு மாணவர்களும் மயக்கமடைந்து வாந்தி, உடல் பாதைகள் ஏற்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon