சென்னையில் மிதிவண்டி பாதை எங்கே? அன்புமணி ராமதாஸ் கேள்வி..!

சென்னையில் மிதிவண்டி பாதை எங்கே என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் சென்னையில் மாநில அரசு திட்டங்களின் படியும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படியும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மிதிவண்டி பாதையை காணவில்லை என தெரிவித்துள்ளார்.

 

வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் மிதிவண்டிகளையும் காணவில்லை என்றும் அவை எப்பொழுது மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் அங்கு மிதிவண்டியில் பயணிக்கும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில் அன்புமணி இந்த கேள்விகளை முன் வைத்துள்ளார்.