நித்யானந்தாவை புகழ்ந்த நீதிபதி..!

நித்தியானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நான்கு மாதங்களுக்கு மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது.

 

நாகை நீதிமன்றத்தில் உரிமைகள் வழக்கு தொடரப்பட்டது. இதில் பக்தர் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு மடங்களையும் நிர்வகிக்க தற்காலிக கமிட்டி அமைத்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நித்தியானந்தா, உமாதேவி உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி நித்தியானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் எங்கு இருக்கிறார் என தெரிய வேண்டும் எனவும் கூறினார். காணொளி மூலம் ஆஜராக கூறலாம் எனவும் தெரிவித்தார்.

 

ஆனால் மனுதாரர் தரப்பில் நித்தியானந்தா ஆஜராக இயலாது என தெரிவிக்கப்பட்டது. அரசு உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறிய நீதிபதி தண்டபாணி வழக்கை தள்ளுபடி செய்தார்.