திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலை கிராமத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். முனுசாமி என்பவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு நடந்து சென்றார்.
முறையான சாலை வசதி இல்லாத பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்தகத்தை அடைந்தார். அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கரடு முரடான மண் சாலை வழியாக மலை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முதியவரின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
காளை மாடு முட்டியதில் பெண் பலி..!
தங்கக் கட்டிகளை வாங்குவதாக கூறி ஏமாற்றிய கும்பல்..!
மாணவியிடம் தகாத முறையில் பேசிய பேராசிரியர்..!
முடி வெட்டிய சவரத் தொழிலாளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிய ராகுல் காந்தி..!
குரூப் 2 தேர்வு எழுத வந்த பெண்ணிடம் கெஞ்சிய காவலர்..!
பெண்களை ஏற்றாமல் சென்ற பேருந்து ஓட்டுனருக்கு மிரட்டல்..!