நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை..!

ணவு பாதுகாப்பு சட்ட விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவின் பேரில் நூடுல்ஸ் மொத்த விற்பனை நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

 

இதில் 23 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு சட்ட மீறல்களின் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால் அவர்களின் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் எச்சரித்துள்ளார்.