பசுவை வளர்க்கும் கும்பலை சேர்ந்தவர் என தவறுதலாக நினைத்து காரில் துரத்திச் சென்ற 12 ஆம் வகுப்பு மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பசுவதையை தடுக்கும் நோக்கத்தில் பல்வேறு சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் பல்வேறு மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மோதல்கள் மற்றும் ரத்த கலரிகள் அதிகரித்த வருகின்றன. அந்த வகையில் ஹரியானாவில் அதிர்ச்சி தரும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மாகாணத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 19 வயதான மாணவன் ஆரியன் மிஸ்ரா தனது நண்பர்களுடன் தனது ஆகஸ்ட் 23ஆம் தேதி காரில் சென்றுள்ளார். அப்பொழுது பசு கடத்துபவர்கள் காரைநோட்டமிட்டபடி செல்வதாக நினைத்த ஒரு கும்பல் சட்டவிரோதமான துப்பாக்கி உடைத்த ஆயுதங்களுடன் வாகனத்தை விரட்டியுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் பயத்தில் காரை வேகமாக ஓடிச் சென்றுள்ளனர்.
மேலும் பசு பாதுகாப்பு கும்பலும் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் காரைவிடாமல் துரத்திச் சென்றுள்ளது. பல்வா என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியில் தடுப்புகளை உடைத்தபடி மாணவர் மிஸ்ரா கார் சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் கும்பல் காருக்குள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.