--- --:--:-- --

டாஸ்மாக் கடைகளிலும் பில்லிங் மிஷின் திட்டம்..!

6

டாஸ்மாக் கடைகளிலும் பில்லிங் மிஷின் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக மது பிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

 

இதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் 12,000 பில்லிங் மிஷன் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், டாஸ்மாக் கணக்குகளை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இனி எந்த கடைகளிலும் கூடுதலாக பணம் வாங்க முடியாது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon