ஐந்தாவது மாடியில் இருந்து குதித்த மாணவி..!
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி விடுதியில் ஐந்தாவது மாடியில் இருந்து மருத்துவக்கல்லூரி மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி கீழே குதிப்பதற்கும் முன்னதாக கட்டடத்தின் விளிம்பில் அமர்ந்து அழுது கொண்டிருந்ததை சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.
உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் செல்வதற்குள் மாணவி கீழே குதித்து விட்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தவர் என்பதும், காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





