தொடரும் பாலியல் தொல்லை..இன்று ஆலோசனை..!
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களோடு தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தலைமையில் ஆய்வு செய்தார். இன்று மதியம் 3 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கல்லூரிகளின் முதல்வர்கள் முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிருஷ்ணகிரி, திருச்சி மற்றும் கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாகிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது,
📱 Share on WhatsApp 𝕏 Share on X





