தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அஜித்தின் திரை வாழ்க்கையில் மறக்கமுடியாத மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தை இயக்கியவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் GOAT. இப்படத்திற்காக சமீபத்தில் அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
இதில் அஜித் குறித்தும் பேசிய வெங்கட் பிரபு “கொஞ்ச நாளைக்கு முன்னாடி அஜித் சார் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது அவரை பார்க்க போயிருந்தேன். போவதற்கு முன்னால் விஜய் சார்கிட்ட, அஜித் அண்ணாவைப் பார்க்க போறேன்னு சொன்னேன்.
‘அங்கேபோனதும் போன் போட்டுக் குடுடா’ன்னு சொன்னார்.அஜித்தை பார்த்தவுடன் விஜய் சார்கிட்ட போன் போட்டு கொடுத்ததும் அவங்க இரண்டு பேரும் அழகா, சாதாரணமா, இயல்பா, சந்தோஷமாக பேசிட்டிருந்தாங்க” என கூறினார்.
மேலும் செய்திகள் :
ரூ.250 கோடியை தாண்டிய விஜய் சம்பளம்..!
புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் நடிகை தர்ஷனா?
திடீரென நீ நான் காதல் சீரியலில் இருந்து விலகியது ஏன்?
விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா! உருக்கமாக போட்ட பதிவு..!
சின்னத்திரையில் மீண்டும் நடிக்கமாட்டேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை பிரியங்கா..!
'கோட்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது..!