நா சிங்கிள் என்று யார் சொன்னது? காதல் குறித்து உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்

டிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.தென்னிந்திய திரையுலகில் கலக்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

 

அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளிவரவுள்ளது.கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் ரகு தாத்தா. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

இப்படத்திற்கான ப்ரோமோஷன்களில் முழுமூச்சாக இறங்கியுள்ளார் கீர்த்தி.இந்த நிலையில், அவர் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் “தனியாக இருக்கிறோம் என்று ஃபீல் பண்ணியதுண்டா” கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் “நான் சிங்கிள்-னு யார் சொன்னா” என கூறினார்.

 

இந்த விஷயம் இணையத்தில் வைரலாக, கீர்த்தி சுரேஷ் காதலில் இருக்கிறார், ஆனால் அவருடைய காதலன் யார் என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள்.