நாக பாம்பு கடித்ததால் பறிபோன பிரபல பாம்புபிடி வீரர்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 வயதான பாம்பு பிடிப்பாளர் நாகப்பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் சுனில் என அடையாளம் காணப்பட்டது. கரன்சாவில் உள்ள ஒரு வீட்டில் நாகப்பாம்பு காணப்படுவதாக சுனிலுக்கு அழைப்பு வந்தது.
பாம்பை பிடித்து பையில் வைக்க முயற்சித்த பொழுது நாகப்பாம்பு தப்பி ஓடி அவரது கையை கடித்தது. மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி சுனில் விஷம் தாக்கி உயிர் இழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





