போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்ட இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்..!
சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டதாக கூறப்படும் 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குளத்தூரை சேர்ந்த ஆர்யா என்பவர் நண்பர்களுடன் புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து போதை நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நண்பர்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பெயரில் புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





