ஹேர் பின்களை வைத்து நூதன முறையில் திருட்டு..!
சென்னையில் மீண்டும் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட தொடங்கியுள்ளனர். கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நித்யா வெங்கட்ராமன் சென்னைக்கு அவரது கணவருடன் வந்துள்ளார்.
அடையார் காந்திநகர் பகுதியில் உள்ள சலூனுக்கு அவர் சென்றுள்ளார். அப்பொழுது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளிருந்த லேப்டாப் மற்றும் பேக் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்பொழுது இரண்டு நபர்கள் சத்தம் வராதபடி உண்டியல் போன்ற சிறிய ஆயுதத்தை பயன்படுத்தி காரின் கண்ணாடியை உடைத்து லேப்டாப் மற்றும் பேக்கை திருடி செல்வது தெரிய வந்தது. மேலும் இதே நபர்கள் அந்த பகுதியில் 3 இடங்களில் கைவரிசை காட்டி இருவர் என தெரிய வந்தது.
திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என திருடிய விதம் கொண்டு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த ராம்ஜி நகர் என்பவர் திருச்சியில் நடத்திய பருத்தியாலையில் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்துள்ளனர்.
1990களில் இருந்து 2007 வரை செயல்பட்ட அந்த ஆலையின் அடையாளமாக அந்த நகர் ராம்ஜி நகர் என்று பெயரானது. அந்த ஆலையில் வேலை செய்யும் பொருட்டு வடமாநிலத்தில் இருந்து வந்து தங்கிய ஒரு பகுதி கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





