--- --:--:-- --

வீட்டுக்கு விளையாட வந்த 10 வயது சிறுமியை வெட்டிக் கொன்ற ஐடி ஊழியர்..!

4

திருச்செங்கோட்டில் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியால் வெட்டி ஐடி ஊழியர் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டு சிலர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்ட செந்தில் குமார் கடந்த மூன்று மாதங்களாக குடும்ப தகராறு காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் அருகிலேயே யாருடனும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இவருக்கு அதிகப்படியான சப்தம் கேட்கும் பொழுது மனநிலை பாதிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் அவரது உறவினர்களின் வாரிசுகளுடன் சேர்ந்து வெட்டப்பட்ட சிறுமி ஆன்லைன் கேம் விளையாடுகிறார்.

 

அப்பொழுது விளையாட்டு மும்முரத்தில் சத்தம் போட்டு விளையாடியதால் கத்தியுடன் வேகமாக வந்த செந்தில்குமார் சோபாவில் அமர்ந்திருந்த சிறுமியை கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.

 

ஆனால் சிறுமியின் உறவினர்களோ ஏற்கனவே செந்தில்குமார் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் அதை சிறுமி வெளியே கூறி விடுவாள் என்ற நோக்கில் வெட்டியதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon