உணவகத்தில் புகுந்து இளைஞரை கொலை செய்த பெண்ணின் சகோதரர்கள்..!
தர்மபுரி அருகே உணவகத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இலக்கியம் பட்டியில் உள்ள பிரியாணி கடையில் பணிபுரிந்த முகமது ஆசப் என்ற இளைஞரை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்தனர். சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் ஓமலூரை அடுத்த செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இரட்டை சகோதரர்களான ஜனரஞ்சன் ஜன அம்ச பிரியன் மற்றும் அவரது நண்பர்கள் கௌதம் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் கைதான இரட்டை சகோதரர்களின் சகோதரியே முகமது ஆசிப் காதலித்து வந்ததாகவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இருவரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து இளைஞரை கொலை செய்ததும் தெரிய வந்ததையடுத்து நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





